தமிழகத்தில் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு பின் கடந்த இரு வாரங்களாக மீண்டும் வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெப்பம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருப்பதாவது:
தமிழகத்தில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன் ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் டாகவும் இருக்கும் என தெரி வித்துள்ளது.
8 நகரங்களில் 100 டிகிரி
நேற்றைய நிலவரப்படி தமிழகத் தில் 8 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்ச மாக வேலூரில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னையில் 102.2 டிகிரி, திருச்சியில் 102.02, மதுரையில் 101.12 டிகிரி, கடலூரில் 100.94 டிகிரி, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, நாகப்பட்டி னம் ஆகிய இடங்களில் தலா 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வால்பாறையில் 3.6 மி.மீ., கொடைக்கானலில் 3 மி.மீ. மழை பெய்துள்ளது.