காங்கிரஸ் கட்சியின் தேசிய செய லாளர் சின்னாரெட்டி, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் அமைய உள்ள காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த எம்எல்ஏக் கள் கூட்டத்தில் நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப் பட்டார். இதனால் நமச்சிவாயத் தின் ஆதரவாளர்கள் ஆவேச மடைந்து சாலை மறியல், பேருந்து கள் மீது கல்வீச்சு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் முக்கிய முடிவு எடுப்பதாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து வில்லியனூரில் உள்ள நமச்சிவாயத்தின் வீட்டுக்கு சென்ற காங்கிரஸ் தேசிய செயலாளர் சின்னாரெட்டி, நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து சின்னா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை கட்சித் தலைவர் நமச்சிவாயமும், காங்கிரஸ் சட்டப் பேரவை தலைவர் நாராயணசாமி யும், துணை நிலை ஆளுநரிடம் அளிப்பார்கள். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். கட்சித் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளருடன் அமைச்சரவை குறித்து நாராயணசாமி கலந்து பேசி அனுமதி பெறுவார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு நமச்சிவாயம் உழைத்தார். அதை கட்சி தலைமை நன்கு அறியும். அவருக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி மேலிடம் அளிக்கும். காங்கிரஸ் அரசு பதவி ஏற்கும் தேதி குறித்து மாநில தலைவர் நமச்சிவாயம் முடிவு செய்வார். அவர் செய்த சேவைகளை கட்சி மறந்து விடாது. அவரது பலத்தையும் அறிந்துள்ளோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் நமச்சிவாயத்துக்கு உரிய மரியாதையை தரும்.
கிரண்பேடியை ஆளுநராக நியமிக்க மத்திய பாஜக அரசுக்கு உரிமை உள்ளது. ஆளுநர் அவருக்கு உள்ள வழிமுறைகளின் படி செயல்படுவார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவர் களுக்கு உள்ள வழிமுறைகளின் படி செயல்படுவர்.
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “நான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டு நடப்பேன். என்னைப்பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டும். நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.