நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து பணியாற்றிடக்கூடிய சூழலை உருவாக்க, சேலத்தில் நடந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. தேசிய தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மாநிலதுணைச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் தெரிவித்திருப் பதாவது: தமிழகத்தில் அதிமுக உறவு முறிந்த சூழலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்தன. போட்டியிடாத தொகுதிகளில் வேட்பாளர்கள் பற்றி எழுந்த சர்ச்சை, தேர்தல் நிதியில் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
இருகட்சி உறுப்பினர்களும் சேர்ந்து இயங்கியது, ஒற்றுமை தேவை என்ற உணர்வு ஓங்கி யிருப்பது இவற்றோடு திமுக தோல்வியும் பரிசீலனைக்குரியது. மாவட்டங்களில் உள்ள பிரச்சினை களுக்கும், உழைக்கும் மக்களின் அமைப்புகளில் காணப்படும் மோதல்களை சரி செய்வதற்கும், கட்சிக்கு நேர்ந்துள்ள சோதனைக்
காலத்தில் கட்சியை பலப்படுத்திடும் ஒரே லட்சிய நோக்கிற்காகவும் விவாதங்களை நடத்தி, கட்சித் தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அரசியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.