‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர் 36-வது வாரமாக இன்று ஒளிபரப்பாகிறது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ‘குறையொன்றுமில்லை’என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் இசை ஆளுமை பற்றிய இனிய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் 36-வது வாரமாக இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரி யாரின் ஜெயந்தியை முன்னிட்டு ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி யாகும்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, காஞ்சி பெரியவர் பற்றி பாடியிருக்கும் பக்தி இசைத் தொகுப்பை, மும்பை சண்முகானந்தா சபையின் தலைவர் டாக்டர் வி.சங்கர் மற்றும் அவரது குழுவினர் பிரத்யேகமாக வழங்கவுள்ளனர்.
பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் மறு ஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.