தமிழகம்

டிராபிக் ராமசாமி முயற்சியால் சிவகங்கையில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

செய்திப்பிரிவு

சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது நண்பரான கிராம நிர்வாக அதிகாரி ஒருவரின் பணி நிறைவு விழாவுக்காக நேற்று சிவகங்கை வந்திருந்தார். சிவகங்கை அரண்மனை வாசல், பேருந்து நிலையம் முன்பு இடையூறாய் இருக்கும் பிளக்ஸ் பேனர்களை பார்த்து சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதை அகற்றக்கோரி சிவகங்கை ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தார்.

பின்னர் அரண்மனை வாசலில் இருந்து பேருந்து நிலையம் வரை நடந்தே சென்று விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பேனர்களை தனது கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்தார். இதையடுத்து அதிமுகவினர் தாமாகவே வந்து தங்கள் பேனர்களை அகற்றினர்.

டிராபிக் ராமசாமியின் செயலுக்கு வணிகர்கள், பொதுமக்கள் பாரா ட்டு தெரிவித்தனர்.

பின்னர் டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வரே அவரது பதவியேற்பு விழாவில் பிளக்ஸ் பேனர் இல்லாமல் சட்டத்தை கடைப்பிடித்துள்ளார். எனது வேண்டுகோளை ஏற்று பிளக்ஸ் பேனரை அகற்றிய அதிமுகவினருக்கு நன்றி தெரிவி த்துக் கொள்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT