தமிழக சட்டப்பேரவையின் தற் காலிக தலைவராக செம்மலைக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிர மாணம் செய்து வைக்கிறார்.
பிற்பகல் 1.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில், சட்டப் பேரவை தற்காலிக தலைவர் செம்மலை பதவியேற்பு விழா நடக்கிறது. ஆளுநர் ரோசய்யா, செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.