அருணாச்சலப் பிரதேசத்தில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், '19.5.2016 அன்று அருணாச்சலப் பிரதேசம், தவாங் மாவட்டம்,ஜஸ்வந்த்கார் பகுதி அருகே, எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், போதிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 10 - மெட்ராஸ் படைப்பிரிவு ராணுவ வீரர் லேன்ஸ் ஹவில்தார் சி.ராமசாமி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
பணியில் இருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரர் சி.ராமசாமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.