தமிழகம்

தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உறுதி

செய்திப்பிரிவு

ஈரோடு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வீரப்பன்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 948 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 463 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் கொள்ளை சம்பவங்களும், 2 ஆயிரத்து 119 வழிப்பறி சம்பவங்களும் நடந்துள்ளன. 2 ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டமும் உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கு பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். குறிப்பாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படவுள்ளது.

திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 54 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற் றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி 50-வது வட்ட அதிமுக அவைத் தலைவரும், மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவத்தின் தந்தையுமான ஜெகநாதன் அதிமுகவில் இருந்து விலகி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

SCROLL FOR NEXT