தமிழகம்

ஸ்டாலின் துணை முதல்வராவார்: பெஸ்ட் ராமசாமி

செய்திப்பிரிவு

கோவையில் நிருபர்களிடம் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பெஸ்ட் ராமசாமி நேற்று கூறியதாவது:

கொங்குநாட்டின் பிரச்சினை களை தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான். அவர் தலை மையில் ஆட்சி அமையும். மு.க.ஸ்டாலின் துணை முதல் வராக பொறுப்பேற்பார்.

திமுக தேர்தல் அறிக்கையின் நகல்தான் அதிமுக தேர்தல் அறிக்கை. அப்படியே காப்பி அடித்துள்ளனர். வார்த்தை மட்டும்தான் மாறி இருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இதற்கிடையே, இந்த தேர்தலி லும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கிறார். மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவதாக சொல்வதை வைத்துப் பார்த்தால் இன்னும் 15 ஆண்டுகள் அவருக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT