நாமக்கல்: நாமக்கல் எஸ்பி புதூரைச் சேர்ந்தவர் கே.கே.வீரப்பன் (77).1993-2001-ல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். 1980-ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1996-2001-ல் கபிலர்மலை தொகுதி எம்எல்ஏவாகவும், அதன் பிறகு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராகவும் பதவி வகித்தார்.
இதன்பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர் அரசியலில் இருந்து விலகினார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவர் எஸ்பி புதூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.