தமிழகம்

வரி செலுத்துவோர் குறைகளை தீர்க்க சிறப்புக் குழு: வருமானவரித் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வரி செலுத்துவோரின் குறைகளைதீர்க்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கும், அதிகமான மதிப்பீடு குறித்த வரி செலுத்துவோர் குறைகளை களைவதற்கும் வேண்டி, மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இக்குழுவை அமைத்துள்ளார்.

வரி செலுத்துவோரின் நேர்மையான குறைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் மதிப்பீட்டு ஆணைகள் நேர்மையாகவும், நியாயமாகவும், ஏற்புடையதாகவும் இருப்பதற்கான சூழ்நிலைக்கு உதவி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது இந்தக் குழு.

தபாலில் அனுப்பலாம்

மதிப்பீட்டுக் குறைபாடுகளை chennai.hpsa.localcommittee@incometax.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது ‘கணக்கு தாக்கல் செய்ததற்கும் அதிகமான மதிப்பீடு குறித்த வரி செலுத்துவோர் குறைகளை களைவதற்கான குழு, வரிமானவரித் துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி), எண் 121, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600034’ என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.

வருமான வரித்துறையின் சென்னை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் ஏ. சசிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT