இறைச்சி மற்றும் மீன் கடைகளின் கழிவுகளால் ரெட்டேரி கூவமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ளது ரெட்டேரி. இந்த ஏரி, கொளத்தூர் அருகே ஜவஹர்லால் நேரு சாலை (நூறடி சாலை), சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம்-புழல் புறவழி சாலை பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது.
380 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி, ஆரம்ப காலத்தில் புழல், கொளத்தூர் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. தற்போது பறவைகளின் புகலிடமாக மட்டுமே இருந்து வருகிறது.
ரெட்டேரி கரை பகுதிகள் ஆக்கிர மிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள் ளன. குறிப்பாக, பெரம்பூர்-செங்குன் றம் சாலையில், திருவள்ளூர் நகர், புதிய லட்சுமிபுரம் பகுதிகளில், ஏரியின் கரை பகுதிகள் ஆக்கிர மிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டு களாக நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், திருவள்ளூர் நகர் பகுதி யில், ஏரிக்கரை மற்றும் சாலை யோரத்தை ஆக்கிரமித்துள்ள 30-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் மற்றும் மீன்கடைகளின் கழிவுகளால் இந்த ஏரி கூவமாக உருமாறி வருகிறது. இதனால் ஏரி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக மாசடைந்துள்ளன.
கொரட்டூர் ஏரி, ரெட்டேரி, அம்பத் தூர் ஏரி ஆகிய 3 ஏரிகளையும் சுற்றுலா தலங்களாக உருமாற்றும் திட்டத்தின்கீழ், ரூ.85 கோடியில் பொதுப்பணித் துறை பணிகளை தொடங்கிய நிலையில், இறைச்சி மற்றும் மீன் கடை கழிவுகளால் ரெட்டேரி கூவமாகி வருவது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்த தாவது: ரெட்டேரியின் கரைப்பகுதி கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை வருவாய்த் துறையின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். தற்போது, ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதில், முதல் கட்டமாக திருவள் ளூர் நகர் பகுதி ஏரிக்கரையில் அமைந்துள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளை அகற்றும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம் என்று அவர்கள் தெரிவித் தனர்.