தமிழகம்

அதிக பணம் செலவழித்தது அதிமுக: தயாநிதி மாறன் கருத்து

செய்திப்பிரிவு

'திமுக-தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், மக்கள் தீர்ப்பு திமுக-வுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது, ஆனால் பணநாயகத்தினால் அதிமுக வெற்றி பெற்றது' என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "இந்தத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுக-வின் பணநாயகம் கடைசியில் வெற்றியை தீர்மானித்துள்ளது.

வாக்குக்கு பணம் அளிக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியதால் ஆளும் கட்சியினர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT