தமிழகம்

காதுகேளாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயி மகள்: மேற்படிப்புக்கு உதவ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காதுகேளாத மாணவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் பி.காயத்ரி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்திரி மொத்தமுள்ள 1,000 மதிப்பெண்களுக்கு 923 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விவரம்: தமிழ் 156, பொருளாதாரம் 199, வணிகவியல் 196, கணக்குப்பதிவியல் 199, வணிக கணிதம் 173.

மாணவி காயத்ரியின் வெற்றி குறித்து அவரது தந்தை எம்.பழனிச் சாமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

செவித்திறன் குறைபாடுடைய குழந்தையை ஏன் படிக்க வைக்கிறாய் என்று உறவினர்கள் என்னிடம் கூறினர். அதையெல்லாம், பொருட்படுத்தாமல் கல்விதான் என் மகளின் வாழ்க்கைக்கு உதவும் என எண்ணி விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்தேன்.

படிப்பை மட்டுமே முழுமூச்சாக கொண்டு எனது மகளும் படித் தாள். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு பி.காம் படிப்பு படித்துவிட்டு, வங்கி அதிகாரியாவதே காயத்ரியின் விருப்பம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பதால் எனது மகளின் மேற்படிப்புக்கு யாரேனும் உதவினால் ஏற்றுக்கொள்வேன் என் றார்

தொடர்புக்கு பழனிச்சாமி: 9443991975.

SCROLL FOR NEXT