தமிழகம்

ஜூன் 25-ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மதிமுக ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: "மதிமு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT