தமிழகம்

தேர்தல் நாளில் படப்பிடிப்பு, திரைப்பட காட்சிகள் ரத்து

செய்திப்பிரிவு

சட்ட மன்றத் தேர்தலை ஒட்டி வாக்களிக்கும் நாளான மே 16 அன்று தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு மற்றும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து திரையங்குகளின் பகல் மற்றும் மாலை காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘ தேர்தலை முன்னிட்டு நாளை ஒருநாள் தமிழகத்திலுள்ள 1100 திரையங்குகளில் பகல் மற்றும் மாலை காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன’’ என்றார்.

படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவது குறித்து பெப்சி தலைவர் ஜி.சிவா கூறுகையில், ‘‘திரைப்பட தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நாளை ஒருநாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த முடிவை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகள் சேர்ந்தே எடுத்துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT