தமிழகம்

ஜெயலலிதா மீது மக்கள் கோபம்: முரளிதர ராவ் கருத்து

செய்திப்பிரிவு

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் ஆ.மகராஜனை ஆதரித்து நேற்று மாலையில் டவுன் சந்திபிள்ளையார் கோயில் அருகே பிரச்சாரம் செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:

அதிமுகவுக்கு பாடம் புகட்ட தமிழகத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தியாவிலே யாரும் நெருங்க முடியாத, தொடர்புகொள்ள முடியாத முதல்வராக ஜெயலலிதா செயல்பட்டதால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

குடும்ப அரசியல் கட்சியாக திமுக நடக்கிறது. அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன என்றார்.

          
SCROLL FOR NEXT