சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 10% இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலாஜி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இடபிள்யூஎஸ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் திரும்ப பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் இதுவரை 69% இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால் ம.கா பல்கலைகழகத்தில் MSc Bio Tec படிப்பான விண்ணப்பத்தில் EWS பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேலிக்கூத்தானது. இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.