மதுரை: மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் மேலூரில் நேற்று நடந்த மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கழிப்பறை வசதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தால் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறினர்.
இந்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்தும் நிறைவேற்றப்படவில்லை. 5 பவுன் வரை மட்டுமே நகைக் கடனை தள்ளுபடி செய்துள்ளனர் என்றார்.