கடலூர்: ரசாயன மண்டலம் கடலூருக்கு வந்தால் புற்றுநோய் பாதிப்பின் வீரியம் அதிகரிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கைமாநாடு நேற்று முன்தினம் நடந் தது. மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத் வரவேற்று பேசினார். இதில் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது:
தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருக்கிறது. இந்த சூழலில் ரசாயன மண்டலம் கடலூருக்கு வந்தால் புற்றுநோய் பாதிப்பின் வீரியம் அதிகரிக்கும். என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர பணி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சென்னையில் ஐயப்ப பக்தர் ஒருவரின் விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்று பேசியது அரசியல் சாசன சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டை வேறு பாதைக்கு திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
இதேபோல், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், "பாஜக விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படவில்லை. பெட்ரோல்,டீசல் மீது மோடி அரசு போடும்வரிதான் விலைவாசி உயர்வுக்குகாரணம். 8 ஆண்டுகளில் வருமானம் உயரவில்லை. வாழ்க் கைத் தரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது" என்றார். மத்தியக் குழு உறுப்பின்ர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன் உள் ளிட்ட பலர் பேசினார்கள். மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான் நன்றி கூறினார்.