விருதுநகர்: 56 நடன முத்திரைகள், நவரசங் களை வெளிப்படுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் 3 வயது மகள் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நோபல் ஃபுக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியாக ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியின் 3 வயது மகள் மீரா அரவிந்தா 56 நடன முத்திரைகள் மற்றும் நவரசங்களை செய்து காட்டினார்.
இச்சிறுமியை சாதனை யாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப் பட்டார். இச்சாதனையை நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை சிறுமி மீரா அரவிந்தாவுக்கு நோபல் ஃபுக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.