தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று நடந்தது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கிறது. தமிழக முதல்வராக வரும் 23-ம் தேதி ஜெயலலிதா பொறுப்பேற்கிறார். இதற்கான விழா, சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது.
இதையடுத்து, நூற்றாண்டு விழா அரங்கத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை பல்கலைக்கழக வளா கத்தை ஒட்டிய பகுதிகளில் அலங் கார மின் விளக்குகள் டிஜிட்டல் போர்டுகள் வைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று தலை மைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தலைமையில், முதல்வர் பதவி யேற்பு விழா தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இக்கூட் டத்தில் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக் குமார், கூடுதல் டிஜிபிக்கள் திரிபாதி, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்வர் அறை தயார்
வரும் 23-ம் தேதி காலை முதல்வராக பதவி யேற்கும் ஜெயலலிதா, தலை மைச் செயலகத்துக்கு வந்து பொறுப்பேற்கிறார். அதன் பின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என கூறப் படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற முதல்வர், அதன் பின் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை.
தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு, மனு தாக்கல், பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுக வெற்றி பெற்று முதல் வராக பதவியேற்று, தலைமைச் செயலகத்துக்கு வருவதால், அவரை வரவேற்க, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் குழுவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக அவரது அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது போல் அமைச்சர்கள் அறைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.