தமிழகம்

கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தைத் திருமணம்... உணர்த்துவது என்ன? - கே.பாலகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு திருமணம் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குழந்தைத் திருமணம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர சில யோசனைகளை முன்வைத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வி துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 10 பேர், 8-ம் வகுப்பு மாணவியர்.

பாலின பாரபட்சத்திற்கு எதிரான தீவிர செயல்பாடுகளில் அவசியத்தை இந்த நிலைமை உணர்த்துகிறது. தமிழ்நாடு அரசு, இந்த குறிப்பான பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்ய சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT