தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி பேசியதாவது:-
தமிழக சட்டப்பேரவை தேர் தலில் கூட்டணி இல்லாமல் தனது சொந்த பலத்தில் தனித்துப் போட்டியி டுகிறோம். அனைத்து சமூகத்தினருக் கும் தேர்தலில் பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளோம். பாஜக அரசானது லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்க்ளை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டை அழிக்க சதி செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் காங்கிரசும் ஒன்றுதான். பணக்காரர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் இந்த கட்சிகள் அவர்களின் நலனுக்கான திட்டங்களையே தீட்டுகிறார்கள். தமிழகத்தில் சாதி ரீதியிலான வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழும் 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டு வாக்குறுதிகளை வழங்கு வார்கள். அந்த வகையில், தமிழகத் தில் திமுகவும், அதிமுகவும் இலவசங் கள் வழங்குவதாக சொல்லி தமிழக மக்களை பிச்சைக்கார்கள் ஆக்குகின் றன. இவ்வாறு மாயாவதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வரவேற்றுப் பேசினார்.