படம்: அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு அலுவலர்கள் சென்று வர ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெறும் அரசு அலுவலர்கள். 
தமிழகம்

அரியலூர் ஆட்சியரின் டீசல் சிக்கன நடவடிக்கை: அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அலுவலர்கள் பயணம்

பெ.பாரதி

அரியலூர்: அரியலூரில் அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அனைத்துத் துறை அலுவலர்களும் பயணித்தனர். டீசல் செலவினை சிக்கனம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த புதிய நடவடிக்கையை பின்பற்றி இவ்வாறாக சென்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கடம்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று (ஜூன் 08) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முகாம் நடைபெறும் கிராமத்துக்கு ஒரே அரசு பேருந்தில் செல்ல ஆட்சியர் ரமண சரஸ்வதி ஏற்பாடு செய்திருந்தார். அதிலும் பேருந்தில் செல்லும் அனைத்து அலுவலர்களும் கட்டணம் ரூ.25 கொடுத்து பயணச்சீட்டு பெற்று சென்றனர்.

அதேபோல் திரும்பி வருவதற்கும் ரூ.25 பயணச்சீட்டு பெற வேண்டும் என்பது கட்டாயம். அனைத்துத்துறை உயர் அலுவலர்களுக்கும் வாகனங்கள் கொடுக்கப் பட்டிருந்தாலும் அனைத்து வாகனங்களும் முகாம் நடைபெறும் கிராமத்துக்கு சென்று வந்தால் டீசல் செலவு அதிகமாகும் என்பதால் ஒரே வாகனத்தில் அரசுப் பேருந்தில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அரசு அலுவலர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.

SCROLL FOR NEXT