அப்புசாமியின் கைவண்ணத்தில் உருவான போர்வையுடன் தோனி. 
தமிழகம்

2 ஆண்டுக்கு பிறகு தோனியை அடைந்த சென்னிமலை நெசவாளியின் போர்வை

செய்திப்பிரிவு

ஈரோடு: கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மகளுடன் இருப்பது போல சென்னிமலை நெசவாளி நெய்த கைத்தறிப் போர்வை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தோனியிடம் சென்று சேர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கே.அப்புசாமி(43). சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். நெசவுப்பணி மூலம் வித்தியாசமான படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர்.

கடந்த 2020-ல் கரோனா பரவல் அதிகரித்து இருந்த நிலையில் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, கிரிக்கெட் வீரர் தோனி, தனது மகளுடன் இருப்பது போன்ற உருவப்படத்தை, போர்வையாக அப்புசாமி உருவாக்கினார். அப்போது சென்னையில் ஐபிஎல்கிரிக்கெட் போட்டி ரத்தானதால், தோனியை சந்தித்து அப்புசாமியால் இதை வழங்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதிதிருவள்ளூர் கிரிக்கெட் கிளப்பின் சில்வர் ஜூப்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க வந்த தோனியிடம், வழங்கஅப்புசாமி முயற்சித்தார். பாதுகாப்பு காரணங்களால், அவரைச் சந்திக்க முடியாத நிலையில், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மூலமாக, அப்புசாமியின் போர்வை, தோனியிடம் சென்று சேர்ந்தது.

கரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் தோனியிடம், தனது படைப்பு சென்று சேர்ந்ததால் அப்புசாமி பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.

SCROLL FOR NEXT