தமிழகம்

“உணவளிப்பதை அறம் என உணர்ந்து தரமான உணவை வழங்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: உணவளிப்பதை அறம் என உணர்ந்து தரமான உணவை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற கருப்பொருளோடு இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவளிப்பதை அறம் என உணர்ந்து தரமான உணவை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்" மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு தினத்தில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT