திமுகவும் காங்கிரஸும் ஊழலில் விளையாடிய கூட்டணி என்று அரக்கோணம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
வேலூர் மாவட்டம் அரக் கோணம் அடுத்துள்ள வேடல் கிராமத்தில் வேலூர், திருவண் ணாமலை மாவட்ட அதிமுக வேட் பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி யதாவது:
தரமான கல்வியை கட்டணம் இல்லாமல் வழங்கி வருகிறோம். 4 இணை சீருடை, நோட்டுப் புத்தகம், சத்துணவு, மிதிவண்டி, இலவசப் பேருந்து பயண அட்டை, மடிக்கணினி, உயர்கல்விக்கான ஊக்கத் தொகை வழங்கி வரு கிறோம். திமுக தேர்தல் அறிக் கையில் இதுபோன்ற திட்டங் கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 54 பொறியியல், கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகள் 2 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதால் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண் ணிக்கையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இதுபோன்ற திட்டங்களை திமுக தொடர்ந்து செயல்படுத்தும் என்று எந்த வாக்குறுதியும் அளிக்க வில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர் களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரி வித்துள்ளனர். மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை.
அதிமுக ஆட்சியில் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 14.3 லட்சம் ஏழை எளிய மக்க ளுக்கு ரூ.3,256 கோடி செலவில் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி என்றால் ஊழல் கூட்டணி. நிலக்கரி, 2ஜி, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் ஊழலில் விளையாடியவர்கள். மக்களால் தண்டிக்கப்பட்டவர்கள்.
திமுக அங்கம் வகித்த காங் கிரஸ் ஆட்சியில் நடந்த ஹெலி காப்டர் ஊழல் விசாரணை நடக் கிறது. இவர்களால் எங்கும் ஊழல் எதிலும் ஊழல். திமுகவினர் உங் கள் வீடு தேடி வாக்குக் கேட்டு வந்தால் அவர்களது ஊழல் குறித்து எடுத்துக்கூறி விரட்டி அடியுங்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததால் 60 வயது கடந்த கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு காலத்துக்கு ஏற்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். கடந்த 2005-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளது. எனவே, இரண்டாவது புதுவாழ்வு திட் டத்தை ஓரிரு மாதங்களில் ரூ.900 கோடி மதிப்பில் உலக வங்கி நிதியுதவியுடன் தொடங்க உள்ளோம். தற்போது புது வாழ்வுத் திட்டத்தில் பணியாற்றிய வர்களுக்கு மீண்டும் பணிகள் வழங்கப்படும்.
மக்கள் மீது அக்கறை இல்லாத திமுகவினர் அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய நீதிமன்றத்துக்குச் சென் றுள்ளனர். அவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு பேசினார்.