ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கப்படவில்லை என்று ரயில்வே வாரியத்தின் (டிராபிக்) உறுப்பினர் முகமது ஜம்செத் தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி அதை முடக்கியதாகவும், பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருப்ப தாகவும் தகவல்கள் வெளியா கின. இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதிகாரி விளக்கம்
இந்நிலையில் இதுபற்றி ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் முகமது ஜம்செத் கூறும்போது, “ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கப்படவில்லை, அதி லிருந்து எந்த தகவலும் திருடு போகவில்லை என்பது சைபர் வல்லநர் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வல்லுநர்கள் குழு மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பாக உள்ளது. ’’ என்றார்.