மருத்துவ பொது நுழைவுத் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொள்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் போராட்டம் நடத்தி னோம். ஆனாலும், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று உச்ச நீதிமன்றம் உறுதியாக கூறிவிட்டது. இந்த உத்தரவால் தமிழகத்தில் 3.50 லட்சம் மாணவ, மாணவிகள், பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கிராமப்புற மாணவர்களின் நலன் கருதிதான் தமிழக அரசு 2007-ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப் புக்கு மாணவர்களை சேர்த்து வந் தது. இதனால், கடந்த 9 ஆண்டு களில் அரசு மருத்துவக் கல்லூரி களில் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர் களில் 52 முதல் 62 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்களாக இருந் தனர்.
இந்த நிலையில், பொது நுழை வுத் தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள். சிபிஎஸ்இ பாடத்திட் டத்தின் அடிப்படையில்தான் நுழை வுத் தேர்வு இருக்கும் என்பதால், சிபிஎஸ்இ மாணவர்கள்தான் பயன்பெறுவார்கள். தமிழக மாண வர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்வாக வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவந்த பிறகு, பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம்.
பொது நுழைவுத் தேர்வு நடத் தும் முடிவை உடனே கைவிட வேண்டும். இதுசம்பந்தமாக அவ சர சட்டம் கொண்டுவருமாறு மத் திய அரசை தமிழக அரசியல் தலை வர்கள் வலியுறுத்த வேண்டும்.
பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், நுழைவுத் தேர்வால் பாதிக் கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் அமைப்பு சார்பில் சென்னை மருத் துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 14-ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும். இதில் அரசு மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவி கள், பெற்றோர் கலந்துகொள் கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அரசு மருத்துவர்கள் கணேஷ், சாந்தி இளங்கோ உடன் இருந்தனர்.