அனைவரும் தவறாமல் வாக்க ளிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ யலலிதா வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். இந்தச் சூழ்நி லையில் அனைவரும் உங்கள் ஜனநாயகக் கடமையை தவறா மல் ஆற்ற வேண்டும் என வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட பெற்றுள்ள அரிய வாய்ப்புதான் தேர்தலும், வாக்குப்பதிவும். தேர்தலில் வாக்களிப்பது ஒரு புனிதக் கடமை. ஜனநாய கத்தை காப்பது நமக்கும், நமது சந்ததியினருக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய புனிதச் செயலாகும்.
அரசியலில் தன்னுடைய வெற் றிக்காக, அதிகாரப் பசிக்காக சிலர் தாங்கள் பெற்ற பிள்ளை களேயே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுகின்றனர். அரசியல் ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும் களங் கப்படுத்துவதையும், சூழலுக்கு ஏற்ப திரைக்கதை வசனத்தை அரங்கேற்றுவதையும் தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கி றது. அத்தகைய தீய சக்திகளின் நச்சு முயற்சிகளை தமிழக மக்கள் கவனமாக இருந்து முறியடிக்க வேண்டும்.
ஒரே ஆயுதம்
நமது உரிமைகளை நிலை நாட்டிக்கொள்ளவும், அச்சமின்றி வாழவும் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குரிமை என்பதை வாக்காளர்கள் மறக்கக் கூடாது. வாக்குப்பதிவு நாளான திங்கள் கிழமை (இன்று) ஒவ்வொரு வரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயல லிதா கூறியுள்ளார்.