சென்னை: தமிழ்நாடு முழுவதும் 44 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 1996-ல் ஐபிஎஸ் அதிகாரியான அமல்ராஜ், திருப்பூரில்உதவி காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து, மதுரை துணை ஆணையர், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம், திருச்சி, சேலம் சரக டிஐஜி, சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் ஆணையர், மேற்கு, மத்திய மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 2021-ல் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு காவல் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இவர் தற்போது தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு போலீஸ்அகாடமியில் நேரடி எஸ்.ஐ.களுக்கான பயிற்சி நடைபெற்றுவருவதால், காவல் அகாடமி இயக்குநர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் பட்டியல்: