தமிழகம்

மெரினாவில் மாயமான மாணவரை தேடியபோது நீரில் தத்தளித்த மற்றொரு மாணவர் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைசேர்ந்த கல்லூரி மாணவர் சாய் சரண் (21)நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்று குளித்துள்ளார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கிய அவர்மாயமானார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீஸார், கடலோர காவல் படை மற்றும் மெரினா மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடியபோதும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அவரைத் தேடும் பணியில் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவரை ரப்பர் படகு மூலம் மீட்டனர். விசாரணையில் மீட்கப்பட்ட நபர் சாய் சரண் இல்லை என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட நபர் அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரமசிவம் (20) என்பது தெரியவந்தது.

மாயமான சாய் சரண் குறித்து எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT