ராமேசுவரம் அருகே வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள். 
தமிழகம்

இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக ராமேசுவரத்தில் பதுக்கி வைத்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தென்னந்தோப்பில் வனத்துறையினர் நேற்று சோதனை நடத்தச் சென்றனர். அவர்களை பார்த்ததும் தென்னந்தோப்பில் இருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அங்கு சோதனை நடத்திய வனத்துறையினர், பதப்படுத்தப்பட்ட நிலையிலிருந்த 500 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT