தமிழகம்

வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றவில்லை: சரத்குமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றவில்லை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, அன்னஞ்சி, பழநிசெட்டிபட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தங்கதமிழ்செல்வன், கதிர்காமு, ஓ.பன்னீர் செல்வம், ஜக்கையன் ஆகியோரை ஆதரித்து சரத்குமார் நேற்று பிரச்சாரம் செய்தார். பழநிசெட்டிபட்டியில் அவர் பேசியதாவது:

திமுக, காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. கூடா நட்பு கேடாக முடியும் என்று கருணாநிதி அன்று கூறினார். ஆனால், இன்று அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த கூடா நட்பு கேடாக முடியப் போகிறது.

2006-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றவில்லை. ஆனால், ஜெயலலிதா 2011-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ன பேசுகிறார் என்று எதுவும் புரியவில்லை. பொதுவாழ்க்கையில் தூய்மை, ஒழுக்கம் வேண்டும். அது ஜெயலலிதாவிடம் உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT