தமிழகம்

மீனவர் பிரச்சினையை போக்க போர்க்கால நடவடிக்கை: கனிமொழி உறுதி

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால், மீனவர்களின் பிரச்சினைகளைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கூறினார்.

நாகை மாவட்டம் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட கடலோரக் கிராமங்களில், திமுக வேட்பாளர் கிள்ளை ரவீந்திரனுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி, பழையாறு கிராமத்தில் மீனவர்கள் மத்தியில் பேசியது:

வெளிநாடுகளில் நடைபெறும் ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக ஆய்வு செய்து, தமிழகத்தில் அதை செயல்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலம், மீன்பிடித் தடைக்காலங்களுக்கான உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த் தப்படும். டீசல் மானியமும் அதிகரிக்கப்படும். பழையாறு ஐஸ் தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழையாறில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். மீனவ இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மீனவர்களின் பிரச்சினைகளைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT