தமிழகம்

உலக சுற்றுச்சூழல் தினம் | நமக்கு இருக்கும் ஒரே உலகத்தை காக்க பாடுபடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: நமக்கு இருக்கும் ஒரு உலகத்தை காக்க பாடுபவோம் என்று தனது உலக சுற்றுச்சூழல் தின செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையோட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதன்முறையாக பசுமை காலநிலை மாற்றம் நிறுவனம், என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பதே ஒரே உலகம் என்பதை மனதில்கொண்டு, அனைத்து வகையிலும் அதனைக் காக்கப் பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT