தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும் என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
திமுக மகளிரணி தலைவர் கனிமொழி சென்னை மயிலாப்பூரில் வாக்களித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ''ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும்'' என்றார்.