தமிழகம்

‘தி இந்து’ நடத்தும் சென்னையின் சூப்பர் அம்மா போட்டி: பங்கேற்போர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ சார்பில் சென்னையின் சூப்பர் அம்மாவை தேர்வு செய்யும் போட்டி ஜூன் 4-ம் தேதி நடக்கிறது. அதில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அம்மாக்கள் தங்கள் குடும்பத் துக்காக தினமும் 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகின்றனர். அவர்களின் பணியை அங்கீகரித்து, ‘தி இந்து’ அவர்களுக்கு மரியாதை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘தி இந்து’, ஏஆர்சி பன்னாட்டு கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சென்னையின் சூப்பர் அம்மாவை தேர்வு செய்யும் போட் டியை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடத்துகிறது. அம் மாக்கள் தங்கள் சமையல் கலைத் திறன், படைப்பாற்றல், தனித் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த இது சிறந்த களமாக இருக்கும்.

தொடக்க நிலைப் போட்டிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 5-ம் தேதி நடைபெறும். சென்னையின் சூப்பர் அம்மாவாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அம்மாக்கள் ஆன்லைனில் >www.thehindu.com/supermom2016 என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள் ளலாம். மாற்றாக 9940615300, 95664 00700 ஆகிய எண்களை, வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். thehindusupermom2016@gmail.com என்ற இமெயில் மூலமாகவும் தங்கள் பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை தெரிவித்து பதிவு செய்துகொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்ரீநிவாஸ் சில்க்ஸ் அன்டு சாரீஸ், கரூர் வைஸ்யா வங்கி, ஃபோரம் விஜயா மால் ஆகியவையும் இணைந்து நடத்துகின்றன.

SCROLL FOR NEXT