சென்னை தீவுத்திடலில் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் உழைப் பாளர் சிலை அருகே தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் மணவை தமிழ் மாணிக்கம், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரி மைந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோனியா வருகையை எதிர்த்து சிறிது நேரம் கருப்புக் கொடி ஏந்தி கோஷ மிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப் பட்டனர்.
சேப்பாக்கம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ் ணன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் டைசன் இளமாறன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில அமைப் பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2 பெண்கள் உட்பட 101 பேர் கைது செய்யப்பட்டனர்.