மறைமலைநகர் நகராட்சி பகுதி யில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கப் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளைத் தனியாகப் பிரித்து, 250 கிலோ அளவுக்கு வழங் கினால் 2 கிராம் தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபி கண்ணன் கூறியதாவது:
மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 80 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் சேகர மாகும் குப்பைகளை அகற்ற நகராட்சியில் 66 துப்புரவு பணி யாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். தினந்தோறும் சேகர மாகும் குப்பைகளைச் சித்த மனூர் பகுதியில் வைத்துக் குப்பைகளைத் தரம் பிரித்து அழிக்கின்றனர். இருப்பினும் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி என்பதால் மக்கள் புழக்கத்தைப் போல பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகரிக்கின்றன.
பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற் படும் தீமைகளைக் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2013-ம் ஆண்டு கவர்ச்சிகரமான திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள், 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து நகராட்சியிடம் வழங்கி னால், 4 கிராம் தங்கநாணயம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நகராட்சி யில் இதற்காக நிதியும் ஒதுக்கப் பட்டது. ஆனால், இதுநாள் வரை யாரும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வரவில்லை. மாறாகப் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், பிளாஸ்டிக் ஒழிப்பைத் தீவிரமாகச் செயல்படுத்தும் நோக்குடன் 500 கிலோக்கு 4 கிராம் தங்க நாணயம் என்பதை 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வழங்கினால் 2.6 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
இந்த பரிசு திட்டத்தால் பிளாஸ் டிக் ஒழிப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத் தால், மறைமலைநகர் நகராட்சி யில் பிளாஸ்டிக் குப்பைகள் அறவே ஒழிக்கப்படும். எனினும் நகர பகுதியில் பிளாஸ்டிக் குப்பை களை அகற்ற பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.