தமிழகம்

சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக சைக்கிள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது! இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு! சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!" என்று தெரிவித்து உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT