தமிழகம்

சைதாப்பேட்டை தொகுதியில் கூடுதல் மனுவால் தப்பிய திமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக உட்பட 27 வேட்பாளர்கள் சார்பில் மொத்தம் 31 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்களும் மனு அளித்திருந்தனர். திமுக வேட் பாளர் மா.சுப்பிரமணியன், பாமக வேட்பாளர் சகாதேவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.மனோகரன் ஆகியோர் கூடுதலாக ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேட்பு மனுக் கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட் பாளர் மா.சுப்பிரமணியன் அளித் திருந்த முதல் மனுவில் ஒரு இடத்தில் விபரம் அளிக்கப்படாத தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஏற்கெனவே அளித்திருந்த 2-வது மனுவில் முழு விபரங்களும் சரியாக இருந்ததால் அது ஏற்கப்பட்டது.

இதேபோல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.மனோகரன் அளித்த முதல் மனுவில் 9 பேரின் கையொப்பம் மட்டுமே இருந்ததால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அவரின் 2-வது மனுவில் 10 பேரின் கையொப்பம் இருந்ததால் அந்த மனு ஏற்கப்பட்டது.

SCROLL FOR NEXT