பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், மாநில அளவில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.சங்கீதா ஆங்கில பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித் துள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்:
தமிழ்-195, ஆங்கிலம்-199, இயற்பியல்-196, வேதியியல்-200, உயிரியல்-197, கணிதம்-200. மொத்த மதிப்பெண்-1,186. ஓசூர் முனீஸ்வர் நகரில் தந்தை சுப்பிரமணியன், தாய் புனிதா ஆகியோருடன் வசித்து வரும் இவர், இதய சிகிச்சை நிபுணராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவி எம்.ஹர்ஷா கன்னட பாடத்தில் 189 மதிப் பெண் பெற்று, மாநில அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: கன்னடம்-189, ஆங்கிலம்-192, இயற்பியல்-158, வேதியியல்-186, பயாலஜி-170, கணிதம்-195. மொத்த மதிப்பெண்-1,095.
தெலுங்கில் 2-வது இடம்
ஓசூர் அடுத்த பாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ரா.லாவண்யா, தெலுங்கு பாடத் தில் 200-க்கு 195 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். லாவண்யா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்: தெலுங்கு-195, ஆங்கிலம்-181, கணிதம்-154, இயற்பியல்-163, கணினி அறி வியல்-176, வேதியியல்-147 மொத்தம் 1,016 மதிப்பெண் பெற் றுள்ளார்.
மாணவியின் தந்தை ராமநாயுடு, தாய் லதா. “எனது தாய்மொழியில் கற்றதால் தான், என்னால் மாநில அளவில் தெலுங்கு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது என்றும், பிசிஏ படிக்க உள்ளேன்”, என்றும் மாணவி கூறினார்.
ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.கீதா, தெலுங்கு பாடத்தில் 200-க்கு 194 மதிப் பெண் பெற்று, மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்: ஆங்கிலம்-192, இயற்பியல்-158, வேதியியல்-186, தெலுங்கு-194, பயாலஜி-170, கணிதம்-195. மொத்த மதிப்பெண்-1,095.
பாடவாரியாக மாநில அள வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட் டோர் வாழ்த்து தெரிவித்தனர்.