தமிழகம்

19 சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 19 பள்ளிகளுக்கு மாநகராட்சி சார்பில் நேற்று ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் 70 பள்ளிகளில் 61 பள்ளிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 19 பள்ளிகள் 100-க்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

இந்த பள்ளிகளுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தலா ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்தது.

அதன்படி, ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், 19 பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.

பின்னர், சென்னை மாநகராட்சி மேயர் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் 48 வகையான சலுகைகள் காரணமாக, கடந்த எல்லா ஆண்டுகளையும் விட இந்தாண்டு 95 சதவீத தேர்ச்சியை மாநகராட்சி பள்ளிகள் பெற்றுள்ளன. இது, மாநகராட்சி பள்ளிகளின் வரலாற் றில் ஒரு புதிய மைல்கல்லாகும்” என் றார்.

SCROLL FOR NEXT