தமிழகம்

தேர்தலில் கருணாநிதி போட்டியிடுவது எதற்கு? - தா.பாண்டியன் விளக்கம்

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசியதாவது:

திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் 27 பேர் உள்ளனர். அவர்களுக்காக, தேர்தலில் கருணாநிதி போட்டியிடுகிறார். இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்திலேயே திமுக இருந்து பழகிவிட்டது. ஆற்று மணல், தாது மணல் கடத்தல்களிலும், 2 ஜி-யிலும் ஊழல் புரிந்தது திமுக.

பாஜக ஆட்சியில் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தாக்கப் படுகிறார்கள். நீதிமன்றங்களில் பேராசிரியர்கள், பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். எழுத்தா ளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தத் தவறுகளை அதிமுக எம்பிக்கள் தட்டிக் கேட்பதில்லை. எனவே, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது.

ஆட்சியாளர்களிடம் கை ஏந்திப் பிழைத்து வாழ்வது, இனி தமிழனுக்கு இருக்கக்கூடாது. எனவே, நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கும் மக்கள் நலக் கூட்டணி தேதிமுக - தமாகா அணிக்கு, மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT