அருப்புக்கோட்டை அருகே வாக்களித்துவிட்டுத் திரும்பிய மூதாட்டியும், மதுரையில் வரிசையில் காத்திருந்த முதியவரும் மயங்கி விழுந்து இறந்தனர். ஜெயங்கொண்டம் அருகே வாக்களித்துவிட்டுச் சென்ற பெண், மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்பாரெட்டி என்பவரின் மனைவி குருவம்மாள்(75). இவர், தனது வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அப் போது குருவம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரண மாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(70). இவர் வாக்களிப்பதற்காக குடும்பத்தினருடன் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே உள்ள அவ்வை மாநகராட்சிப் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வரிசையில் காத்திருந்தார். அப்போது சுப்பிரமணி திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவர் முதுமை, சுவாசக் கோளாறு காரணமாக உயி ரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விளக்குத் தூண் போலீஸார் விசா ரிக்கின்றனர்.
மின்னல் தாக்கியது
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலையில் மழை பெய்தபோதும் மக்கள் ஆர் வத்துடன் வரிசையில் காத் திருந்து வாக்களித்தனர். ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி வளர்மதி(38), அங்குள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண் டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் வளர் மதி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
பணியிலிருந்தவர் மரணம்
திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே கரட்டுமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ ராஜ். இவர், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரி யராகப் பணிபுரிந்து வந்தார்.
தேர்தல் பணிக்காக காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கயம்பாளையம் அரசுப் பள்ளியில் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதற்காக, நேற்று முன்தினம் இரவே அங்கு சென்று தங்கியுள்ளார். நேற்று காலை பணிபுரிந்துகொண்டிருந்த அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த மையத் துக்கு வாக்களிக்க வந்த பொது மக்கள் உதவியுடன், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோவையிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் மூலமாக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது சடலம், காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.