குஜராத்தில் நடைபெறும் தேசியக்கல்விக்கொள்கை மாநாட்டில் பங்கேற்றுள்ள இதர மாநில அமைச்சர்களுடன், புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம். 
தமிழகம்

புதுச்சேரியில் விரைவில் தேசியக்கல்விக்கொள்கை அமலாகிறது: தேசிய மாநாட்டில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: தேசியக்கல்விக்கொள்கை குறித்து குஜராத்தில் நடக்கும் மாநாட்டில் புதுச்சேரி கல்வியமைச்சர் நமச் சிவாயம் பங்கேற்றுள்ளார். தற்போது தமிழகப் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, விரைவில் இதிலிருந்து மாற உள்ளது. அத்துடன் புதுச்சேரியில் தேசியக் கல்விக்கொள்கை அமலாக அதிக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ இரண்டு நாள் மாநாடு குஜராத் காந்தி நகரில் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில, யூனியன் பிரதேச கல்வியமைச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்தச் சூழலில் தமிழக கல்வியமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கடந்த பல மாதங்களாக புதிய தேசியக்கல்விக்கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் சூழலில்,குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான இந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதிய கல்விக்கொள்கையை புதுச்சேரியில் அமல்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேசி யக்கல்விக்கொள்கை மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட செயல்பாடு இருக்கும்.

தற்போது புதுச்சேரி, காரைக்காலில் தமிழகப் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

அதனால் தமிழகப் பாடத் திட்டத்திலிருந்து மாறும் திட்டமுள்ளது. அதனால்மத்திய அரசு உதவியோடு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் அமலாக்கவும் ஆலோசித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT