சென்னை: வட மாநிலத்தவர்களை இழிவுபடுத்துவது போன்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நடைபெற்ற நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “வட மாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு உத்தரப் பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "தொற்றுகளுக்கு மாநிலங்களோ, எல்லைகளோ தெரியாது. தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள மிகவும் பொறுப்பற்றக் கருத்து, வட இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.