மதுரை: நிர்வாக வசதிக்காக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பல ஒன்றியங்கள் 2 மற்றும் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தனது நிர்வாக வசதிக்காக வருவாய் மாவட்டங்களை 2 முதல் 3 ஆக ஏற்கெனவே பிரித்துள்ளது. இதேபோல் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஒன்றியங்களையும் பிரித்து கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. இது குறித்த பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமைக்கு அனுப்பி பல மாதங்களாகியும் அறிவிப்பு வெளி யாகவில்லை.
இந்நிலையில் மதுரை உள் ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களைப் பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன் விவரம்:
மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் திமுக 6 ஒன்றி யங்களாகச் செயல்படுகிறது. இவற்றை 2 மற்றும் 3 ஆக பிரித்து எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருமங்கலம் ஒன்றியம்: திருமங்கலம் கிழக்கு, திருமங்கலம் மேற்கு, திருமங்கலம் தெற்கு. கள்ளிக்குடி ஒன்றியம்: கள்ளிக்குடி வடக்கு, கள்ளிக்குடி தெற்கு.
தே.கல்லுப்பட்டி ஒன்றியம்: தே.கல்லுப்பட்டி கிழக்கு, தே.கல்லுப்பட்டி வடக்கு, தே.கல்லுப்பட்டி தெற்கு. சேடபட்டி ஒன்றியம்: சேடபட்டி மேற்கு, சேட பட்டி வடக்கு, சேடபட்டி தெற்கு.
செல்லம்பட்டி ஒன்றியம்: செல்லம்பட்டி வடக்கு, செல்லம் பட்டி தெற்கு.
உசிலம்பட்டி ஒன்றியம்: உசிலம்பட்டி வடக்கு, உசிலம்பட்டி தெற்கு.
பிரிப்பதற்கு முன் 40 ஊராட்சி கள் வரை இடம் பெற்றிருந்த ஒன்றியங்களில் தற்போது 10 முதல் 20 கிராம ஊராட்சிகளே உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்
கடலாடி ஒன்றியம்: கடலாடி வடக்கு, கடலாடி தெற்கு.
சாயல்குடி ஒன்றியம்: சாயல்குடி மேற்கு, சாயல்குடி கிழக்கு.
போகலூர் ஒன்றியம்: போகலூர் கிழக்கு, போகலூர் மேற்கு.
மண்டபம் ஒன்றியம்: மண்டபம் கிழக்கு, மண்டபம் மேற்கு, மண்ட பம் மத்தி.
முதுகுளத்தூர் ஒன்றியம்: முதுகுளத்தூர் கிழக்கு, முதுகுளத் தூர் மேற்கு, முதுகுளத்தூர் மத்தி. திருவாடானை ஒன்றியம்: திருவாடானை வடக்கு, திருவா டானை மத்தி, திருவாடானை தெற்கு. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த 11 ஒன்றியங் கள் 15 ஆக பிரிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவில் சிவகாசி ஒன்றியம் சிவகாசி தெற்கு, சிவகாசி கிழக்கு என்றும் விருதுநகர் ஒன்றியம் விருதுநகர் மேற்கு, விருதுநகர் வடக்கு என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.